லைகர் விமர்சனம்
கலப்பு தற்காப்பு கலைகளில் (MMA) சாம்பியன்ஷிப் பெறவேண்டுமென நினைக்கிறான் ராயபுரத்தைச் சேர்ந்த லைகர். நேஷ்னல் சாம்பியன்ஷிப்பைத் தவறவிட்ட ஆண் சிங்கமான பலராமிற்கும், அவரது மனைவி பெண் புலியான பாலாமணிக்கும் பிறந்தவன் என்பதால் லைகர் என காரணப் பெயரைச் சூட்டுகின்றனர்.
மும்பையிலுள்ள JKD எனும் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடங்குகிறான். முதலில் அங்கு வேலை செய்பவனாகச் சேர்க்கப்பட்டு, பின் பயிற்சி அளிக்கிறார் அவனது பயிற்சியாளர். இடையில், லைகருக்குத் தானியாவுடன் காதல் வருகிறது. காதலி ஏமாற்ற, அதிலிருந்து மீண்டு தேசிய சாம்பியன்ஷிப்பை வென்று, சர்வதேச போட்டிக்காக அமெரிக்கா செல்கிறான். சர்வதேச சாம்பியன்ஷிப்பை அவனால் பெற முடிந்ததா என்பதே படத்தின் கதை.
‘ஆக்ஷன் ஸ்போர்ட்’ என படத்தினை வகைப்படுத்தியுள்ளனர். முதல் அரை மணி நேரம் மட்டும் அப்படி தீயாக ஆரம்பிக்கும் படம், அதே வேகத்தில் காதல் எனும் குறுக்கு...