LKG – ஸ்ருதிஹாஸன் பாடிய பாடல்
அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களைப் பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களைப் பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டிப் பிரபலமானதாகிறது.
ஆர்.ஜே. பாலாஜியின் 'LKG' படத்தின் டிரெய்லர், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்தத் திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில் படத்தின் ப்ரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்கநர் கே.ஆர் பிரபு கூறும்போது, "இதுபோன்ற எதையும் நாங்கள் முன்னதாகத் திட்டமிடவில்லை. இது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வெகுஜனங்களிட...