Shadow

Tag: LNH Creation

என்ஜாய் விமர்சனம்

என்ஜாய் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
A சான்றிதழ் பெற்றுள்ள படம். கல்லூரி முடித்த மூன்று இளைஞர்களையும், கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளையும் சுற்றிப் படத்தின் கதை நடக்கிறது. இளைஞர்களின் வாலிப பொழுதுபோக்கு ஒரு பக்கம்; உடுத்தும் உடையாலும், உபயோகப்படுத்தப்படும் கம்மி விலை கைப்பேசியாலும் அல்ட்ரா மாடர்ன் பெண்களால் இளக்காரமாக நடத்தப்படும் மிடில் கிளாஸ் & மெரிட் மாணவிகளின் மன இறுக்கமும், அவர்களது ஆடம்பர வாழ்விற்கான ஏக்கமும் ஒரு பக்கம் என இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. முதற்பாதி படத்தின், தூக்கலான இரட்டை அர்த்த வசனங்களுக்கும், மாடி வீட்டு ஷாலுவின் வசன உச்சரிப்பு த்வனிக்கும் தாராளமாக A+ என சிறப்புச் சான்றிதழே அளிக்கலாம். படத்தின் முதற்பாதியை இதற்கென்றே ஜாலியாக ஒதுக்கியுள்ளனர். இரண்டாம் பாதியில், சுதந்திரம் என்பது எதுவரை இருக்கவேண்டுமென இளம்பெண்களுக்கு ஓர் அட்வைஸோடு முடித்துள்ளார் அறிமுக இயக்குநர் பெருமாள் காச...
என்ஜாய்– தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மையையும் சீரழிவையும் பேசும் படம்

என்ஜாய்– தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மையையும் சீரழிவையும் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
LNH கிரியேசன் சார்பில் K. லட்சுமி நாராயணன் தயாரிக்கும், புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ளது என்ஜாய் படம். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது இந்தக் கதை. இந்தத் தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கப்பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை. இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசுமொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் தூண்டும். சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்து விடும் ஆயுதமாகவும் இருக்கும். “இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்தப் படமும் வெற்றிபெறும். 'என்ஜாய் ' படம் இளைஞர்கள் க...