Deadpool & Wolverine விமர்சனம்
வானத்தின் கீழ் இருக்கும் எதுவுமே புனிதமில்லை என சகலத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கும் டெட் பூல், இம்முறை பன்னண்டத்தில் (Multi-verse) இருக்கும் அத்தனையையுமே கேலிக்கும் கேள்விக்கும் கிண்டலுக்கும் உரியவை தான் என டாப் கியரில் கலாய்த்துள்ளார். முத்தாய்ப்பாக டெட்பூல் படத்தின் முன்னாள் உரிமையாளரான '21st Century Fox'-ஐ சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளுகிறார் டெட்பூல். ஆங்கில வசனங்களின் சாறு குறையாதவண்ணம் தமிழ் டப்பிங்கையும் மிகக் கலகலப்பாக எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படம் என்றாலும் A சான்றிதழ் பெற்ற படமென்பதை நினைவில் கொள்க. படத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்தி இருந்தாலும், டெட்பூலின் வாய்க்குப் பூட்டு போடாமல் அப்படியே அனுமதித்துள்ளது சிறப்பு.
ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்படி மரியாதையுடன் 'குட் பை' சொல்லி வழியனுப்பி வைப்பதென்பதற்கான செவ்வியல் எடுத்துக்காட்டாக லோகன் திரைப்படம்...