Shadow

Tag: M.R.கிஷோர் குமார்

வண்டி விமர்சனம்

வண்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
டுட்டூ (Duttu) எனும் மஞ்சள் நிற யமஹா RX 135-இன் மூன்று பயணங்களைப் பற்றிய கதை இது. வேலைக்குச் செல்ல கிருஷ்ணாவிற்கு ஒரு டூ-வீலர் தேவைப்படுகிறது; செயினை அறுத்து நகையைக் கொள்ளையடிக்க டிக்‌ஷனிற்கும் செளகத்துக்கும் ஒரு பைக் தேவைப்படுகிறது; காதலி ரீத்தாவை ஷாப்பிங் கூட்டிச் செல்ல தீபக்கிற்கு ஒரு வண்டி தேவைப்படுகிறது. டுட்டூவில் நடக்கும் இந்த மூன்று பயணங்களையும், வேலைப் பயணம், சாகசப் பயணம், காதல் பயணம் என மூன்று அத்தியாயங்களாய்ப் பிரித்து, ஒரு நேர்க்கோட்டில் இணைக்கிறது திரைக்கதை. பயண அத்தியாயங்கள் தொடங்கும் முன், கிருஷ்ணாவின் வாழ்விடம் பற்றியும், அவனது நண்பர்கள் பற்றியும் மிக நீண்டதொரு அத்தியாயம் உள்ளது. விதார்த்திற்கு கிருஷ்ணாவாக நடிக்க நல்லதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர் ரஜீஸ்பாலா. ஆனால், சத்தமாக வாயு பிரித்து, ரபீக் தான் அந்த வளாகத்தில் இருப்போரை எழுப்பிவிடுவான் என்பதெல்லா...