Shadow

Tag: Maanaadu movie Tamil vimarsanam

மாநாடு விமர்சனம்

மாநாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா என்பது படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. எந்தவொரு கணத்திலும் அவனுடைய கவனத்தை வேறுபக்கம் சிதறவிடாமல் தொடர்ந்து அவனைத் தன் வசம் வைத்திருப்பது. இப்போது இன்றைக்கு இந்தக் கவனத்தில் உங்கள் கவனம் சிதறாமல் உங்களால் ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடிக்க முடியுமா சொல்லுங்கள்? சொல்வீர்கள் என்றால் உங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிட முடியும். கடந்த பத்தாண்டுகளில் ஒரு திரைப்படம் சார்ந்த நமது பார்வை வெகுவாக மாறி இருக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையும் மாறி இருக்கிறது. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சினிமா பார்க்கும் பார்வையாளனின் மனநிலை தறிகெட்டுப் போயிருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட நிலை கடந்து, சினிமா பார்க்கும்போது பொழுதுபோகவில்லை என மொபைல் போனை நோண்டப் பழகிய காலகட்டத்தில்...