மாயநதி விமர்சனம்
அட்வைஸ் கேட்டகரியில் வரும் படங்கள் நல்ல கலைத்தன்மையோடு இருப்பதில்லை என்ற விமர்சனம் சமீபகாலமாக அதிகமாக வைக்கப்படுகிறது. அந்த விமர்சனத்திற்கு வலு சேர்ப்பது போல் தான் சில படங்களும் வெளியாகின்றன. "ஆ, ஊ"ன்னா சாட்டையைச் சுழட்டி விடுகிறார்கள். ஆனால் மாயநதி அதிலிருந்து விலகி ஒரு தனித்துவத்தைth தொட முயற்சி செய்துள்ளது.
நாயகி வெண்பா, அப்பாவின் கனவைத் தன் நினைவெனக் கருதி 12-ஆம் வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி பெறப் படிக்கிறார். அவருக்குள் காதலனாக நுழைந்த ஆட்டோ டிரைவர் அபி சரவணன் படிப்பில் தேக்கத்தை ஏற்படுத்துகிறார். அப்பாவின் கனவுக்கும், இடையில் தோன்றிய அப்பாவித்தனமான காதலுக்கும் இடையில் என்னானது என்பதே படத்தின் கதை.
அப்பாவாக ஆடுகளம் நரேனும், மகளாக வெண்பாவும் நடிப்பில் ஒரு அத்தியாயத்தை எழுதி இருக்கிறார்கள். அப்பா மகளுக்கான கெமிஸ்ட்ரி அத்தனை அழகாகப் பொருந்தியுள்ளது. அபி சரவணன் கேரக்டர் அந்தளவிற்கு ...