32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மாயநதி – பவதாரிணி இசையில் ஒரு பாடல்

Dinesh R சேலம் Published: 26/02/2019 1 நிமிட வாசிப்பு Updated: 08/04/2019 சினிமா
எழுத்து அளவு:

Mayanathi Venba

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளிப் பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை; டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண்; இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு சராசரி இளைஞன் ஆகிய மூன்று பாத்திரங்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’.

பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியைக் கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா என்பதை யதார்த்தமாகக் கூறியுள்ளார் இயக்குநர்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களைக் கவிஞர் யுகபாரதி எழுத, ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, மயில் கிருஷ்ணன் கலை இயக்கத்தைக் கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் மாஸ்டர் இப்படத்தின் இரண்டு பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.