Shadow

Tag: Madras Motion Pictures

“அப்பா அம்மாக்கள் தான் ரியல் ஹீரோ” – இயக்குநர் கார்த்திகேயன் மணி | Madras Matinee

“அப்பா அம்மாக்கள் தான் ரியல் ஹீரோ” – இயக்குநர் கார்த்திகேயன் மணி | Madras Matinee

சினிமா, திரைச் செய்தி
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம், விஜய் டிவ் ராமர் போன்றோர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியாகித் தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், ''சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் எங்களின் கனவு பெரிதாக இருந்தது. கனவையும் ஆசையையும் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடங்கு...
மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review

மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எழுத்தாளர் ஜோதி ராமய்யாவிற்கு, நடுத்தர வர்க்கத்தைப் பற்றி நாவல் எழுதவேண்டுமெனப் பிரியப்படுகிறார். அந்தத் தேடலில், டாஸ்மாக்கில் சந்திக்கும் கண்ணன் எனும் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறார். கண்ணன், அவரது குடும்பம், அவரது வாழ்க்கைப் பாடுகள், அவரது மகள் தீபிகா, மகன் தினேஷ், மனைவி கமலம் என ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சியான கதை தான் மெட்ராஸ் மேட்னி படத்தின் கதையும். கட்சி விட்டுக் கட்சி தாவும் அரசியல்வாதி பச்சோந்தி பிரேமாவாகக் கீதா கைலாசம் நடித்துள்ளார். அம்மா பாத்திரங்களில் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், கலகலப்பான பாத்திரங்களிலும் முத்திரையைப் பதிப்பது சிறப்பு. அவரது உதவியாளராக விஜய் டிவி ராமர் தோன்றியுள்ளார். நகைச்சுவைக்கு உதவாவிட்டால் கூடப் படத்தில் ஒரு பாத்திரமாகப் பொருந்திப் போகிறார். பொதுவாகத் திரைப்படங்களில் அவர்க்கு இது போல் நிகழாது. தினேஷாக நடித்துள்ள விஸ்வாவும், தீபிகாவாக நடித்...

மெட்ராஸ் மேட்னி | ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கே.சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள...