Shadow

Tag: Mahendiran Rajamani

நண்பர்கள் – அன்புக்கு அடிமை

நண்பர்கள் – அன்புக்கு அடிமை

சினிமா, திரைச் செய்தி
லவ் ஃபெயிலியரான ஒருத்தனின் மூன்று பெஸ்ட் ஃப்ரெண்ட்கள் படும் அவஸ்தை தான் 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் கதை. தில்லுக்கு துட்டு 'லொள்ளு சபா' ராம்பாலாவிடம் பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி இப்படத்தை இயக்குகிறார். 'ஆக, நண்பர்கள் தான் நாயகனின் அடிமைகளா?' என்ற கேள்விக்கு, "நண்பர்கள் அன்புக்கு அடிமை. நமக்காக எதுவும் செய்வார்கள் என்ற அர்த்தத்தில் தலைப்பை வைத்தோம். தலைவியிடம் (ஜெ.) சொல்லப்படும் இந்தப் பிரபலமான வசனத்தை எங்க கதைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்துக் கொண்டோம்" என்றார் மகேந்திரன் ராஜமணி. "இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னை விட்டா வேறு யாரும் பொருந்த மாட்டாங்க எனக் கதை கேட்டதும் ஜெய் சொன்னார். படம் பார்த்ததும் ஆடியன்ஸும் அதைச் சொல்வாங்க. நான் படத்துக்குப் போகணும்னா நினைச்சா ஜாலியான ஒரு படத்துக்குத்தான் போவேன். அந்த மாதிரி தான் என் படத்தையும் எடுத்திருக்கேன். கண்டிப்பா மக்களும் இந்தப் படத்தை ந...