மனிதன் விமர்சனம்
சாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம்.
பொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் 'ஏழைப் பங்காளன்' ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபரா...