Shadow

Tag: Manobala Picture House

பாம்புசட்டை விமர்சனம்

பாம்புசட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், 'அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?' என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோமசு...
சதுரங்கவேட்டை – 2 இல் அரவிந்த்சாமி

சதுரங்கவேட்டை – 2 இல் அரவிந்த்சாமி

சினிமா, திரைத் துளி
2014ஆம் ஆண்டு, H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "சதுரங்கவேட்டை". அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் நடிக்க, சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுத, சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் பாகத்தையும், மனோபாலாவின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ தான் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் "சதுரங்கவேட்டை" படத்தில் கூறியிருந்தார்கள். முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் ...