ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்
ஓம் எனத் தொடங்கப்பட்ட படத்தை, 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளனர்.
மகனால், லண்டன் ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. அங்கே அவரது நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரளிக்கும் உயிலை உரியவரிடம் சேர்க்க ஸ்காட்லாந்திற்குக் கிளம்புகிறார். இடையில், தற்கொலைக்கு முயலும் ராசி நட்சத்திராவிடம் ஆதரவாகப் பேசி, அவரைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கிறார். தன்னுடன் ஸ்காட்லாந்து வரை பயணித்தால், தற்கொலை எண்ணம் விலகும் எனக் கூறி ராசி நட்சத்திராவுடன் பயணிக்கிறார். பயணத்தின் முடிவில் என்னாகிறது என்பதே படத்தின் கதை.
OM (ஓம்) என்றால் ஓல்ட் மேன். ராசி நட்சத்திரா பாரதிராஜாவை, ஓல்ட் மேன் என்றே படம் முழுவதும் அழைக்கிறார். ஆனால், அவரை யாராவது அப்படி அழைத்தால் ராசி நட்சத்திராவிற்குக் கோபம் வந்துவிடுகிறது. 'நம் வீட்டுக் குழந்தையை நாம் விருப்பப்பட்ட பெயரில் கூப்பிடலாம். ஆனால் இன்னொ...