Shadow

Tag: Meera – Cheran issue

பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

பிக் பாஸ்
நேரடியாக கமலின் நுழைவில் இருந்து தொடங்கியது. வீட்டுக்குள் ஒரு மறைவான இடத்தில் இருந்து பேசிக் கொண்டிஇருந்தார். இந்த சீசனோட ரகசிய அறையைக் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தார். யாருக்கு உபயோகப்படப் போகிறதெனத் தெரியவில்லை. அதற்கப்புறம் இந்த வாரத்தை பற்றிய வர்ணனைகள் அவரது பாணியில் செய்தார் கமல். வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம். போன வியாழன் இரவில் இருந்தே ஆரம்பித்தது. ‘தன்னோட மேக்கப் கிட்டைத் திருடிட்டாங்க, எல்லார் பொருளும் திரும்பி வந்துருச்சு, ஆனா என்னோடது மட்டும் வரல, இதுக்குக் காரணம் சாக்ஷி தான்’ என கவினிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மீரா. பெண்களுக்கு ஒன்றெனில் துடித்துப் போவதில் கவினுக்கு இணையாக யார் இருக்கிறார்கள்? உடனே சாக்ஷியிடம் போய் இதைப் பற்றிக் கேட்கிறான். சாக்ஷி எதுவும் திருடியது போல் நமக்குக் காட்டப்படவில்லை. அதுவும் இல்லாமல், மாட்டிக்காமல் திருடும் அளவுக்கு சாக்ஷிக்கு மூளை இர...