Shadow

Tag: MGP Mass Media

அரியவன் விமர்சனம்

அரியவன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘திருச்சிற்றம்பலம்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய மித்ரன் R. ஜவஹரின் படம். இப்படம், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நினைவுகூரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. காதல் எனும் போர்வையில், பெண்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்கள் சொல்லும் நபருடன் அப்பெண்கள் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும் என மிரட்டுகிறது ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று. மிரட்டப்பட்டும் அடிப்பணியாத பெண்களைக் கொலை செய்யவும் துணிகிறது அக்குழு. ஜெஸ்ஸி எனும் இளம்பெண், அக்குழுவால் பாதிக்கப்படும் பொழுது நாயகன் ஜீவா காப்பாற்றிவிடுகிறான். இதனால் கோபமுறும் வில்லன் துரைபாண்டி, ஜீவாவையும், அவன் காப்பாற்றும் பெண்களையும் பழிவாங்கத் துணிகிறான். அதிலிருந்து நாயகனும், பாதிக்கப்பட்ட பெண்களும் எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. நாயகியாக பிரணாளி கோக்ரே நடித்துள்ளார். பாடலுக்கும், நாயகனை வியக்கவும் மட்டுமே ...