
MI – The Final Reckoning | ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே திரையிறங்குகிறது
ஈதன் ஹன்ட் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே களமிறங்குகிறார். அவரது சாத்தியமற்ற மிஷனைக் காண சீட் பெல்ட்டினை இறுக்கிக் கட்டிக் கொண்டு தயாராகுங்கள். பாரமெளன்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்’ படத்தைத் திட்டமிட்டதை (மே 23) விட 6 நாட்கள் முன்னதாக, இப்போது மே 17, 2025 சனிக்கிழமை அன்றே திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஐகானிக் ஃபிரான்சைஸின் ரசிகர்கள் இப்போது ஈதன் ஹண்டின் இறுதிப் பணியைப் பெரிய திரையில் காண அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லை.
ஈதன் ஹன்ட்டின் கடைசி மிஷன் என்பதால், இப்படத்தொடரின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் ததும்பும் எதிர்பார்ப்பில் உள்ளனர். டாம் க்ரூஸின் கடைசி மிஷன், இருக்கையின் நுனியில் அமர வைக்கக் கூடிய அதிரடி ஆக்ஷனாகவும், கிளாஸிக்காகவும், அதே சமயம் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
...