Shadow

Tag: Miracle Pictures

நிசப்தம் விமர்சனம்

நிசப்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எவருக்குமே நடந்துவிடக் கூடாத கொடுமை, ஓர் எட்டு வயது சிறுமிக்கு நிகழ்கிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை நிசப்தத்தில் தள்ளி விடுகிறார் இயக்குநர் மைக்கேல் அருண். படத்தின் முதல் பாதி முழுவதுமே அவஸ்தையுடனே அமர வேண்டியுள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான தன் எட்டு வயது மகளின் ரத்தம் தோய்ந்த கால்களைக் காண நேரிடும் தாயின் மனநிலையை கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியவில்லை. அச்சிறுமியும், அவளின் பெற்றோரும் அக்கொடிய அதிர்ச்சியில் (mental trauma) இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் இரண்டாம் பாதி. வாழ்வின் மீதான நம்பிக்கையை முதற்பாதி குலைக்கிறது என்றால், சிறுமியின் புன்னகையை மீட்டு இரண்டாம் பாதி படம் நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது. சில ரணங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாதெனினும், முடங்கி விடாமல் அதிலிருந்து மீண்டு வருவது சாத்தியமே என சுபமாய் படம் முடிகிறது. "எல்லா ஆம்பிளைங்க...