ஃபேண்டசியா விழாவில் மிருதன்
இன, மொழி, தேசிய பேதமற்று உலக மக்கள் அனைவரையும் கவரும் கண்ணியாக இருக்கும் விஷயங்களில் பிரதானமானது சினிமாவே! சமீபமாக தமிழ் சினிமாக்களும் உலகளாவிய அளவில் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அப்படிக் கவனம் பெறும் பட்டியலில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படமும் சேர்ந்துள்ளது.
கனடாவில் நடைபெறும், ‘ஃபேண்டசியா சர்வதேசத் திரைப்படா விழா 2016’ -இற்கு மிருதன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முதல் ஜோம்பி படமான மிருதன், அதன் பிரம்மாண்டட்தாலும் நேர்த்தியான திரைக்கதையாலும் இப்பொழுது உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
திரையில் மட்டுமன்று நிஜ வாழ்விலும் சிறந்த மகனான ஜெயம் ரவி தன்னுடைய மகிழ்ச்சியை, அன்னையர் தினத்தன்று அனைத்து அம்மாக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இத்தகைய அங்கீகாரங்கள் தன்னை மேலும் நன்றாக உழைக்கணுமென உந்துகிறது எனச் சொன்னார் ஜ...