Shadow

Tag: Mortal Engines

மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்

மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. அத்தகைய சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற கர்வம் கொண்ட இங்கிலாந்து அரசின் தலைநகரமான லண்டன் ஒருவேளை நகரத் தொடங்கினால்? ஆம், முழு நகரமே பெரிய வாகனம் போல் சக்கரங்களில் நகரத் தொடங்கிவிட்ட காலத்தில், லண்டன் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதுதான் படத்தின் கதை. பிலீப் ரீவ், 2001 இல் எழுதிய 'மார்டல் இன்ஜின்ஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. கதிர்வீச்சின் பாதிப்பில் நிலமும் நீரும் பாழாகி விட, மக்கள் ராட்சஷ வாகனங்களில் அடைக்கலம் புகுகின்றனர். அதற்கும், 'அழியக்கூடிய இயந்திரங்கள்' எனப் பொருள்படும்படி தலைப்பு வைத்துள்ளனர். எல்லாமும் அழியும், இங்கிலாந்து பேரரசிலும் சூரியன் அஸ்தமிக்கும் என்பதே படத்தின் உட்கரு. ஒரு பெரும் நகரமே சக்கரங்களில் பயணிக்கிறது என்ற மிகு கற்பனையை மிக அற்புதமாகத் திரையில் கொண்டு ...
மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்

மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். ‘மார்டல் இன்ஜின்ஸ்’ எனும் படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது. ‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற பெயரில் பிலிப் ரீவ் எழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம். ‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், ‘தி ஹாபிட்’ தொடர் படங்கள் போன்ற மகத்தான படைப்புகளைப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கித் திரையில் உலா விட்ட பீட்டர் ஜாக்சன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறி பல மாறுதல்களை ஆரத் தழுவிக் கொண்ட ஒரு காலகட்டம். ஒருவரையொ...