
46 – சட்டவிரோதமாய் நடக்கும் பைக் ரேஸ் பற்றிய படம்
விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் T.R.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது '46' என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.
இந்தப் படத்தில் 'காத்திருப்போர் பட்டியல்' படத்தில் நடித்த சச்சின் மணியும், பீச்சாங்கை படத்தில் நடித்த கார்த்திக்கும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷியும் கியானும் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2 படத்தில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.
சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் பு...