Shadow

Tag: Munirathna Kurukshetra review in Tamil

முனிரத்னா குருஷேத்திரம் விமர்சனம்

முனிரத்னா குருஷேத்திரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரண்ணா எனும் கன்னடக் கவியின் ‘கதாயுதா’ எனும் கவிதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு J.K.பைரவி எழுதிய திரைக்கதையை இயக்கியுள்ளார் நாகண்ணா. இது துரியோதனனைப் பாட்டுடை நாயகனாகக் கொண்ட கவிதை நூலாகும். 1964 இலேயே, கர்ணன் போன்ற காவியத்தைப் படைத்துவிட்டது தமிழகத் திரையுலகம். 1988 இல் தூர்தர்ஷனில் தொடராகவும், 2013 இல் ஸ்டார் குழுமத்திலும் பிரம்மாண்டமான முறையில் தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2019 இல், குருஷேத்திரம் 3டி-இல் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. கன்னட நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அறிந்த முகமாக, கர்ணனாய் நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும், அர்ஜுனனாய் நடிக்கும் சோனு சூட்டும் தான். துரியோதனனாக நடித்துள்ள தர்ஷன், அப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. அ...