Shadow

Tag: Munnodi Tamil film

புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

சினிமா, திரைச் செய்தி
ஸ்வஸ்திக் சினிவிஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோஹன் அகர்வால் வழங்கும் படம் "முன்னோடி". இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ளார். விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, "பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ‘ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டிருக்கிறது வேண்டாம்’ என்றேன். ‘வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள். விட்டு விடுங்கள்’ என்றேன். ‘பாடல்கள் , ட்ரெய்லரையாவது பாருங்கள்’ என்றார்கள். வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் 'அக்கம் பக்கம் 'பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. ‘யாரிடம் வேலை பார்த்தீர்கள்?’ என்றேன். ‘எவரிடமும் இல்லை’ என்றார். அவரிடம் பேசியபோது, பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. அவரத...
சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமா, திரைத் துளி
சினிமா மீது கொண்ட காதலால், யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநர் ஆகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவரது பெயர் எஸ்.பி.டி.ஏ.குமார். ‘முன்னோடி’ என்று தலைப்பிடப்பட்ட அப்படத்திற்கு, கதையும் திரைக்கதையும் வசனமும் அவரே! யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத குமார், மணிரத்னம் போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம். அவருடன் இணைந்து சோஹம் அகர்வால் படத்தைத் தயாரித்துள்ளார். ஒருவன் யாரை முன்னோடியாகப் பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். 'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்' என்கிற கருத்தை முன் வைக்கிறது படம். தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, 'குற்றம் கடிதல்' படத்தில் குண...