Shadow

Tag: Music director Sam CS

“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

“நாதலயமாகும் ஒலி சப்தம்” – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

சினிமா, திரைச் செய்தி
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும். நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்தியேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார். சாணிக்காயிதம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, 'மலர்ந்தும் மலராத..' என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரும்,...
சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்

சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்

சினிமா, திரைத் துளி
விக்ரம் வேதாவில் கலக்கிய இசையமைப்பாளர் சாம் CS தான் ‘லைக்காவின் கரு’ படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது படத்தின் இசையில் அதிக கவனம் செலுத்தும் இயக்குநர் விஜய் பேசுகையில், '' சமீப காலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS தான். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாகப் புரிந்து கொண்டு அசத்துபவர் அவர். இந்தப் படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லாப் படங்களையும் விட மிகச் சிறந்த பாடல்களைக் கொண்டதாக நிச்சயம் அமையும். 'லைகாவின் கரு' படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான். இந்தப் பாடல்களைப் போலவே 'லைக்காவின் கரு' படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாகக் கூறுவேன்'' என்றார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் 'லைகாவின் கரு' அருமையானதொரு படமாக உருவாகியுள்ளது....