
MYSAA – ராஷ்மிகாவின் ஆக்ஷன் அவதாரம்
ராஷ்மிகா மந்தனா நடிக்கும், கதாநாயகியை மையப்படுத்திய புதிய திரைப்படத்திற்கு "மைசா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஷ்மிகாவின் அட்டகாசமான ஆக்ஷன் அவதாரத்தை வெளிக்காட்டும்படி அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார்.
இப்படத்தின் போஸ்டரைத் தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடியும், தமிழில் தனுஷும், இந்தியில் விக்கி கௌஷலும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் சிவராஜ்குமாரும் ஆகியோர் போஸ்டர்களை வெளியிட்டனர்.மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பாரம்பரிய புடவையில், பழங்கு...


