“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா
தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை நமீதா, தனது ரீ-என்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்குத் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் . ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”.
நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாளத் திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ-என்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் உள்ளார் நமீதா.
புலிமுருகனில் நடித்த அனுபவத்தைக் குறித்து, “கடந்த ஆண்டு ரீ-என்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்தப் படத்தின் இயக்குநரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்ச்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகம...