நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்
சிவா, ராஜா, மணி ஆகியோர் 'தளபதி' படத்தின் வெளியீட்டு நாள் அன்று ஒரே மருத்துவமனையில் பிறந்த ரத்தம் சதையுமான நண்பர்கள். இதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்த, 'ஒரே வயிற்றில் பிறந்தா ட்வின்ஸ், ஒரே நாளில் பிறந்தால் ஃப்ரெண்ட்ஸ்' என நாயகன் கவினை வாய்ஸ்-ஓவர் மூலம் சொல்ல விடுகிறார் இயக்குநர். 'ஆஹா! தொடக்கமே அற்புதம்' எனப் புல்லரித்து விடுகிறது.
மூன்று நண்பர்களுமே, ஸ்ருதி எனும் பெண்ணைக் காதலிக்கிறார்கள். நட்புக்குள் சத்திய சோதனை உருவாகிறது. சோதனையில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
ரம்யா நம்பீசனை மிகத் தைரியமான பெண்ணாக அறிமுகம் செய்கின்றனர். அதன் பின், வழக்கமான சினிமா ஹீரோயினாக்கி விடுகின்றனர். படம் முடிந்ததும், படக்குழுவினர் பெயர் மேலெழும் பொழுது, கவினை முன் வைத்து ரம்யா நம்பீசனுக்கும், இளவரசுக்கும் நடக்கும் உரையாடல் கூட ரசிக்கவைக்கின்றன.
எந்த நோக்கமுமற்ற வேலையில்லா ...