
நயன்தாரா இன் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111
‘காட் ஆஃப் த மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்தப் படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தைத் தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது. மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது.
அழகும் கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹா, ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய மூன்று படங்க...


