Shadow

Tag: Neeya 2 movie review

நீயா 2 விமர்சனம்

நீயா 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கண்ணபிரான் நடனம் ஆடி காலாலே வீழ்த்திய நாகம் காளிங்கன். அந்த நாகம் மீண்டும் கண்ணனிடம் வரம் கேட்க, கண்ணபிரான் பகலில் மனித உருவாகவும் இரவில் பாம்பாகவும் திரிய வரம் கொடுக்கிறார். அப்படி இரு பொழுதுகளில் வெவ்வேறு உருவங்களோடு அலையும் அந்த நாகத்திற்குப் பெயர் இச்சாதாரி நாகம். அப்படியான இச்சாதாரி நாகம் தான் ராய் லட்சுமி. அவர் அப்படி ஆனதிற்கு ஒரு நாகத்தின் சாபமே காரணம். சென்ற ஜென்மத்தில் ஜெய்யோடு ஏற்பட்ட காதலை இந்த ஜென்மத்தில் அடைய அவர் ஜெய்யைத் தேடுகிறார். ஜெய்யோ கேத்ரின் தெரசாவோடு இல்லற வாழ்க்கையில் இருக்கிறார். அதற்குப் பின் என்னனென்ன தரமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது தான் நீயா2. 1979 இல் வெளியான கமல் ஸ்ரீபிரியா நடித்த நீயா படத்தின் ஆகப்பெரும் பலமே எமோஷன் தான். அது மிகச் சரியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள நியாயம் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். கமல் மட்டு...