Shadow

Tag: Neeya 2 movie

நீயா 2 விமர்சனம்

நீயா 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கண்ணபிரான் நடனம் ஆடி காலாலே வீழ்த்திய நாகம் காளிங்கன். அந்த நாகம் மீண்டும் கண்ணனிடம் வரம் கேட்க, கண்ணபிரான் பகலில் மனித உருவாகவும் இரவில் பாம்பாகவும் திரிய வரம் கொடுக்கிறார். அப்படி இரு பொழுதுகளில் வெவ்வேறு உருவங்களோடு அலையும் அந்த நாகத்திற்குப் பெயர் இச்சாதாரி நாகம். அப்படியான இச்சாதாரி நாகம் தான் ராய் லட்சுமி. அவர் அப்படி ஆனதிற்கு ஒரு நாகத்தின் சாபமே காரணம். சென்ற ஜென்மத்தில் ஜெய்யோடு ஏற்பட்ட காதலை இந்த ஜென்மத்தில் அடைய அவர் ஜெய்யைத் தேடுகிறார். ஜெய்யோ கேத்ரின் தெரசாவோடு இல்லற வாழ்க்கையில் இருக்கிறார். அதற்குப் பின் என்னனென்ன தரமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது தான் நீயா2. 1979 இல் வெளியான கமல் ஸ்ரீபிரியா நடித்த நீயா படத்தின் ஆகப்பெரும் பலமே எமோஷன் தான். அது மிகச் சரியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள நியாயம் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். கமல் மட்டு...
நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்

நீயா 2 – நிஜ கருநாகமும், கிராஃபிக்ஸும்

சினிமா, திரைத் துளி
பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படமான நீயா 2-வில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் உள்ளது. அந்தப் பாம்பைப் பற்றியும், கிராஃபிக்ஸ் பற்றியும் கிராபிஃக்ஸ் நிபுணரான வெங்கடேஷ், "தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்குச் சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரைச் சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் 20 அடி முதல் 28 அடி வரை இந்தப் பாம்பு இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களைப் பயிற்சியாளரைக் கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்த கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது. மேலும், இப்படத்தில் கருந...