
நியூரோ அப்டேட் 2020
‘நியூரோ அப்டேட் 2020’ எனும் கருத்தரங்கத்தை மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை மருத்துவர் திரு. மொஹமெட் ரேலா தொடங்கி வைத்தார்.
சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வருடத்து நியூரோ அப்டேட் கருத்தரங்கத்தில் – நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்த் தொற்று, தூக்கத்தின் பொழுது உடலியல் (Sleep Physiology), உறக்கச் சீர்கேடுகள், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் ஆகியன பற்றி விவாதிக்கப...


