
‘நியூரோ அப்டேட் 2020’ எனும் கருத்தரங்கத்தை மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை மருத்துவர் திரு. மொஹமெட் ரேலா தொடங்கி வைத்தார்.
சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வருடத்து நியூரோ அப்டேட் கருத்தரங்கத்தில் – நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்த் தொற்று, தூக்கத்தின் பொழுது உடலியல் (Sleep Physiology), உறக்கச் சீர்கேடுகள், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் ஆகியன பற்றி விவாதிக்கப்பட்டது. தலைசிறந்த மருத்துவர்கள் நால்வர் யூ.எஸ்.ஏ.விலிருந்தும், யு.கே.வில் இருந்து ஒருவரும், இந்த இரண்டரை நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு இந்திய நரம்பியல் நிபுணர்களுடன் கலந்துரையாடினர். ஜனவரி 10 முதல் 12 வரை நடந்த இந்நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கில், Dr. பாலகிருஷ்ணன் (MMC, சென்னை), Dr. சரோஷ் M.கட்ராக் (GMC, மும்பை), Dr. K.ராதாகிருஷ்ணன் (AVITIS), Dr.J.M.K. மூர்த்தி (ஹைதராபாத்), Dr. அஷோக் பனாகரியா (SMS கல்லூரி, ஜெய்ப்பூர்), Dr. R.M. பூபதி (TNGMSS), Dr. N.முத்துகுமார் (தேவதாஸ் மருத்துவமன, மதுரை) ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.
மூன்று நாள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள்:
>> Basics of Ocular Motor Control: A Video Tutorial
>> Sleep & Circadial Rhythm-Implication for Brain Health
>> Introduction to AntibodyMediated Neurology & the Autoimmune Encephalopathies
>> Approach to Acute Encephalitis
>> Viral Encephalitis & Emerging Infections
>> Imaging in Encephalitis
>> Circadian Rhythm & Sleep Wake Disorders
>> Eye Movements in Cerebellar Disorders
>> Narcolepsy-Update on Diagnosis & Treatment
>> Newer Diagnostic Approaches to CNS Infections
>> Evaluation & Treatment of Sleep Disordered Breathing etc.