ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் படத்தின் முதற்பாகம் 2010இலும், இரண்டாம் பாகம் 2014இலும், தற்போது மூன்றாம் பாகமும் வெளியாகியுள்ளன.
டிராகன்களைக் கொல்லும் டிராகன் வேட்டையனான கிரிம்மலிடம் இருந்து தப்பிக்க, புதிய பாதுகாப்பான மறைவான வசிப்பிடத்தைத் தேடுகிறான் ஹிக்கப். ஹிக்கப்பின் டிராகனான டூத்லெஸ் எனும் நைட் ஃப்யூரி, லைட் ஃப்யூரியைச் சந்திக்கிறது. அதன் தொடர்ச்சியாய், டிராகன்கள் மட்டும் வசிக்கும் பிரத்தியேகமான டிராகன் உலகத்தைக் கண்டடைகின்றனர். கிரிம்மலிடமிருந்து அனைவரும் எப்படிப் பாதுகாப்பாகத் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
முந்தைய பாகங்களைப் போல் ஃபன் எலமென்ட் (fun element), இப்படத்தில் கம்மியென்றே சொல்லவேண்டும். ஆனால், படத்தின் முடிவில் மனதைக் கனக்கச் செய்துவிடுகின்றனர். ஒரு ட்ரைலாகியை முடிக்க அற்புதமான முடிவாக இப்படத்தைக் கொள்ளலாம். இரண்டாம் பாகத்திற்கும், மூன்றாம் பாகத்திற்குமே ஐந்...