Shadow

Tag: Niram Maarum Ulagil vimarsanam in Tamil

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நிறம் மாறும் உலகில், அதாவது நேரத்துக்குத் தக்கப்படி மாறிக் கொள்ளும் உறவுகளில், என்றுமே மாறாதது தாயின் அன்பு மட்டுமே என அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். தாயோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணை, டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் சந்திக்கிறார். அவர், அபிக்கு நான்கு கதைகளைச் சொல்கிறார். முதல் கதை, மும்பையில் டானாக இருக்கும் அப்துல் மாலிக் பற்றிய கதை. அப்துல் மாலிக்காக நட்டி நடித்துள்ளார். மும்பை சிகப்பு விளக்குப் பகுதியில் பிறக்கும் அப்துல்க்கு அம்மா என்றால் உயிர். அம்மாவின் மரணம் அவனை என்னவாக மாற்றுகிறது என்றும், அம்மாவுடன் இணைந்து கடலிலுள்ள தேவதைகளைக் காணவேண்டுமென்ற அவனது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் இந்த அத்தியாயத்தின் கதை. மாலிக்கின் தொழிற்போட்டியாளராக சுரேஷ் மேனனும், அம்மா ஃபாத்திமாவாக கனிகாவும் நடித்துள்ளனர். தனது பிரத்தியேகமான மாடுலேஷனில், அவர் இ...