
ஆகஸ்ட் 16 | சென்னை நேரு விளையாட்டரங்கில் Himesh Reshammiya Capmania Tour
இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகத் தயாரித்து, உருவாக்கி நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த 'யுவன் 360', 'சோனு நிகம் லைவ்', 'விஜய் ஆண்டனி 3.0', 'டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்' உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷாமியா சென்னையில் முழுக்கப் பங்குபெறும் நிகழ்ச்சியை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் முன்னணி இசை நிறுவனமான சரிகம உடன் இணைந்து வழங்க உள்ளது.
பாலிவுட்டில் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ள ஹிமேஷ் ரேஷாமியா, தமிழில் கமல் ஹாசன் நடித்த 'தசவாதாரம்' வெற்றிப் படத்திற்கு இ...




