Shadow

Tag: Nooru Saami movie

“நூறு சாமி: அதன் உணர்வுகளால் தனித்துவமான படம்” – விஜய் ஆண்டனி

“நூறு சாமி: அதன் உணர்வுகளால் தனித்துவமான படம்” – விஜய் ஆண்டனி

OTT, சினிமா, திரைத் துளி
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசி எழுதி இயக்கிய மனதைத் தொடும் குடும்ப நாடகமான நூறு சாமி, தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் பிணைப்பைப் பேசும் படமாக அமைந்துள்ளது. இப்படம், ஆகஸ்ட் 7 முதல் ZEE5-இல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இப்படத்திற்காக இணைந்தனர். விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், தற்போது ZEE5-இல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. இப்படம், தனது குடும்பத்தை வளர்ப்பதற்காக வாழ்நாளை அர்ப்பணித்த விதவைத் தாயான செல்வியைப் பற்றியது. வாழ்க்கையின் பின்-கட்டத்தில் அவர் துணை...
நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

சினிமா, திரை விமர்சனம்
'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?' எனப் பத்தாண்டுகளுக்கு முன் 'பிச்சைக்காரன் (2016)' படத்தில் ஏகாந்த்ராஜ் எழுதிய பாடல் வரிகளில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தால் பிச்சைக்காரன், அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி என்று சசியே விளம்பரப்படுத்தியுள்ளார்.இரண்டு படங்களுமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தனது தாய் செல்விக்கும் ஒரு வாழ்க்கை உண்டென உணர்ந்து, அவரை மறுமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறான் மூத்த மகன் பாஸ்கர். முதலில் தயங்கும் செல்வி, பின் அதற்கு மெல்ல செவி சாய்க்கிறார். ஊரும் உறவினர்களும் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்றும், செல்விக்கு மறுமணம் ஆனதா இல்லையா என்பதே படத்தின் கதை. நூறு சாமியின் அச்சாணியாக விளங்குகிறார் செல்வியாக நடித்துள்ள லப்பர் பந்து சுவாசிகா. படத்தின் குறைகளை எல்லாம் மறக்கச் செய்து,...
“நூறு சாமியில் ஒரு சாமி இயக்குநர் சசி” – மிஷ்கின்

“நூறு சாமியில் ஒரு சாமி இயக்குநர் சசி” – மிஷ்கின்

சினிமா, திரைச் செய்தி
'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' படத்தின் முன் வெளியீட்டுக்கு நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஃபீல் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார். வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம், "ஒரு நாள் இயக்குநர் சசி ஃபோன் செய்து, ஒரு சூழலை விவரித்துப் பாடலுக்கான மெட்டு வேண்டும் எனக் கேட்டார். அதுதான் 'அம்மா அம்மா.. 'எனும் பாடல். அந்தப் பாடலின் மெட்டைக் கேட்டதும் சசி சாருக்குப் பிடித்துப் போனது. உடனடியாக இந்தப் படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என...