
O2 விமர்சனம்
கோவையில் இருந்து கொச்சிக்குச் செல்லும் பேருந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து விடுகிறது. பேருந்தில் சிக்கியவர்கள் ஆக்சிஜனுக்காகப் போராடும் சர்வைவல் த்ரில்லர்தான் படத்தின் கதை.
சர்வைவல் த்ரில்லர் என வகைமைப்படுத்தினாலும், தன் மகனுக்காகப் போராடும் ஒரு வீரத்தாயின் கதை என்ற சிறப்பும் உண்டு இப்படத்திற்கு. தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது செல்ல அழகு மகனாக யூ-ட்யூப் புகழ் ரித்விக் நடித்துள்ளான். அவனது திறமைக்குத் தீனி போடுமளவிற்கான வாய்ப்பு இல்லையெனினும், கிடைத்த ரோலில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிந்துள்ளான் சுட்டிப் பையன்.
படத்தின் ஆரம்பமே, இயற்கையைப் பற்றிய ஓர் 2டி அனிமேஷனில் இருந்து தொடங்குகிறது. அதை அழகாகக் க்ளைமேக்ஸில் கொண்டு வந்து முடித்திருப்பது சாதுரியமான முடிச்சு. இயக்குநர் G.S.விக்னேஷ் எடுத்துக் கொண்ட மாறுபட்ட களம் ஈர்...