“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்
T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார்.
இந்தப் பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்தப் பாடலின் ஹிந்திப் பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு திரு. நாகார்ஜூனாவால் வெளியாக இருக்கிறது.
வெளியீட்டு விழாவினில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்கக் கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடலுக்கான ஐடியாவை முதன் முதலில் அவரிடம் ...