Shadow

Tag: Once upon a time in hollywood thirai vimarsanam

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
லியானார்டோ டி காப்ரியோ, பிராட் பிட் என ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம். அதை விட ஈர்ப்பான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ என்பதேயாகும். ஹாலிவுட்டில் 1969 இல் நடக்கின்ற பீரியட் ஃபிலிம். டைட்டானிக் நாயகன் லியானார்டோ சொன்னது போல், ’இப்படம், 60 களின் ஹாலிவுட்க்கு டாரன்டினோ எழுதிய காதல் கடிதம்’ என்பதே சரி. செம கிளாஸான படம். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ரிக் டால்டன் தனது இறங்குமுகத்தில் உள்ளார். அவரது உற்ற நண்பரான க்ளிஃப் பூத், ரிக்கிற்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறவர். ரிக் டால்டனின் பக்கத்து வீட்டுக்காரராக ரோமன் பொலான்ஸ்கியும், அவரது மனைவி ஷரோன் டேட்டும் வசிக்கின்றனர். இவ்விடத்தில் ஒரு செய்தி: உலகை உலுக்கிய கொடூரமான மரணங்கள் பட்டியலில், ஹிப்பிகளால் கொலையுண்ட மிக அழகான நாயகியான ஷரோன் டேட்டின் வழக்கும் ஒன்ற...