Shadow

Tag: OPS movie review

ஒங்கள போடணும் சார் விமர்சனம்

ஒங்கள போடணும் சார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ஏக மனதாகச் சேர்ந்து அந்த இயக்குநரைப் பார்த்து என்னவெல்லாம் சொல்லக்கூடும்? அவற்றில் ஒன்றாக இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் குரலில், டைட்டில் கிரெடிட் வரும் பொழுது சொல்லப்படும் கதை சுவாரசியத்தைத் தூண்டுகிறது. அங்கிருந்து 'ஒரு கோடி ஒரு பேய்' என்றொரு ரியாலிட்டி ஷோவிற்குள் ஜாலியாய்ப் (!?) போகும் முதற்பாதி படம், இரண்டாம் பாதியில் சீரியசான பழிவாங்கல் கதையாக மாறுகிறது. படத்தின் ஆறுதல்களில் ஒன்று அல்லது ஒரே ஆறுதல், 116 நிமிடங்கள் எனும் படத்தின் கால அளவு தான். ஆனால், அதில் ஜித்தன் ரமேஷ்க்கு பில்டப் காட்சிகள் மட்டுமே 5 நிமிடத்துக்கு மேல் நீள்கிறது. அதுவும் கதைக்கோ, கதாபாத்திர வார்ப்பிற்கோ உதவாத காட்சி அது. அப்பொழுது வரும், 'இவனுக்கா இவ்ளோ பில்டப்?' என்ற வசனகர்த்தா முருகன் மந்திரத்தின் டைமிங் குச...