Shadow

Tag: P.U.Chinnappa

ஜகதலப்ரதாபன் (1944)

ஜகதலப்ரதாபன் (1944)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, டி.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி, எம்.எஸ்.சரோஜினி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாரதாம்பாள்)ஜகதலப்ரதாபன் என்றால் அனைத்துத் துறைகளிலும் கை தேர்ந்தவன் – மிகுந்த திறமைசாலி எனப் பொருள் கொள்ளலாம். இப்போது ‘சகலகலா வல்லவன்’ என்கிறோமே – அதைப்போல. நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு ஜகதலப்ரதாபன் இருந்தார். அவர் தான் பி.யு.சின்னப்பா. தமிழ்த் திரையில் ஆரம்பகாலங்களில் நடிப்பு என்பது, திரையில் தோன்றிப் பாடுவதுடன், பிராமண மற்றும் மணிப்பிரவாள நடையில் ஒரு மாதிரி இழுத்து இழுத்துப் பேசுவதாகத் தானிருந்தது. பாகவதரின் பல படங்களில் இதைப் பார்க்க முடியும். இதே மாதிரி தான் அனைவரும் பேசியும், பாடியும், நடித்தும் வந்தார்கள். அவர்கள் மத்தியில் அருமையாகப் பாடுவதுடன், நடிப்பாற்றலிலும் வல்லவராக விளங்கிய ஒரே நடிகர் பி.யு.சின்னப்பா. எனவே தமிழ்...
கண்ணகி (1942)

கண்ணகி (1942)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.பாலசுப்ரமணியம், யு.ஆர்.ஜீவரத்தினம்)ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘கண்ணகி’ 1942 இன் ஆகப் பெரிய வெற்றிச் சித்திரம். ஜூபிடர் பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சிறந்த படத்தயாரிப்பு நிலையங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் முந்தைய படங்கள் ‘சந்திரகாந்தா (1936)’, மற்றும் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதையான ‘அனாதைப்பெண் (1938)’. இப்படங்களைத் தொடர்ந்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் ‘கண்ணகி’. சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. தமிழ் மொழிக்கு இக்காப்பியத்தின் வாயிலாகப் பெருமையைச் சேர்ந்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி போன்றோர் பின்னிப் பிணைந்த மகத்தான கதையம்சம் கொண்ட ‘கண்ணகி’ கதையை ஜூபிடரின் கண்ணகி வெளிவருவதற்கு முன்பே தயாரித...