“தங்கலான் | கருணையற்ற மனிதனாக இருந்ததால் மட்டுமே சாத்தியமானது” – பா. ரஞ்சித்
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் பா. ரஞ்சித், "படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்று சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் அவருடைய விலா எலும்பு முறிந்தது. அந்தக் காட்சி நிறைவடைந்ததும் உடனடியாக என்னுடைய உதவியாளரை அழைத்து, 'அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா?' என்று கேள் எனச் சொல்வேன். அவர்கள் விக்ரமிடம் கேட்டுவிட்டு, 'வலி இருக்கிறது ஆனால் பொறுத்துக் கொள்கிறேன்' என பதில் அளிப்பார்கள். அதனால் மீண்டும் அதே காட்சியைப் படமாக்கினே...