Shadow

Tag: Pannikutty Tamil review

பன்னிகுட்டி விமர்சனம்

பன்னிகுட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, விஜய் டிவி ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன் ஆகியோரோடு ஓர் அழகான பன்னிகுட்டியும் நடித்துள்ளது. வேலையில்லா உத்ராவதிக்குத் தொட்டதெல்லாம் பிரச்சனையாகத் தெரிய, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்க பலமுறை முயல்கிறார். அவரை ஒருமுறை காப்பாற்றும் ப்ரூனே, கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்ததும், அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்கிறது உத்ராவதிக்கு. மகிழ்ச்சியில் கோடாங்கிக்கு நன்றி சொல்ல வரும் வழியில், பன்னிக்குட்டி ஒன்றின் மீது மோதி விடுகிறார் உத்ராவதி. அப்பன்னிக்குட்டியின் மீது மீண்டும் வண்டியில் மோதினால்தான் நடக்கும் நல்லது தொடரும், இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் எனச் சொல்லி விடுகிறார் கோடாங்கி. திட்டாணிக்குக் கல்யாணம் நடக்கவேண்டுமெனில், ராணி எனும்...