Shadow

Tag: Pariyerum Perumal

பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு

பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு

சினிமா, திரைச் செய்தி
தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள். உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயம் காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாகக் கொண்டாடுவார்கள் என்று நம்பினேன். அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை, படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்க...
பரியேறும் பெருமாள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'சாதியும் மதமும் மனித குலத்திற்கு விரோதமானது' என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது. இப்படத்தில், சாதி எப்படி மனித குலத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறதெனப் பரியேறும் பெருமாளின் வாழ்க்கையில் இருந்து சித்தரிக்கப்படுகிறது. கருப்புத் திரையில் வெள்ளையெழுத்துகளாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் போடும்பொழுதே சந்தோஷ் நாராயணன் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறார். படம் தொடங்கியவுடனே, "கருப்பி, அடி கருப்பி!" என்ற பாடலின் மூலமாக ஒரு வாழ்வியலுக்குத் தயார் செய்துவிடுகிறார். படத்தின் நாயகன் அவர்தான்! படத்தின் இசையும், ட்ரோன் மூலம் பறவைக் கோணத்தில் காட்டப்படும் நிலப்பரப்பும், படத்தோடு பார்வையாளர்களை ஒன்றச் செய்துவிடுகிறது. சட்டக்கல்லூரி மாணவனாக வரும் யோகி பாவுவின் ஒன்லைன் கவுன்ட்டர்கள் அட்டகாசம். நகைச்சுவைக்காக என்றில்லாமல் ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் வந்து அசத்துகிறார். பரியேறும் பெருமாளாகக...
பரியேறும் பெருமாள்: முன்னோக்கி இழுக்கப்படும் தேர் – பா.ரஞ்சித்

பரியேறும் பெருமாள்: முன்னோக்கி இழுக்கப்படும் தேர் – பா.ரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதற்படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஷ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாகப் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நி...
பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராம் பேசுகையில், "எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப் போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர்...
பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்

பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்

சினிமா, திரைத் துளி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னைத் தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்தப் படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர்ப்பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கி...
நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-இன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலமாகவும், 'மறக்கவே நினைக்கிறேன்' தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழகக் கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாகப் பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கா...