
பேய் கதை – குதூகல த்ரில்லர்
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகை ஆஷ் மெலோவிற்குத் தமிழில் வெளியாகும் முதற்படம் இது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, படத்தின் இசை & முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
படத்தின் இயக்குநர் ஜீன் மோசஸ், '''பேய் கதை' கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். த்ரில்லர், காமெடி, சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தப் படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு த்ரில்லிங்கான தருணமாக இருக்...


