Shadow

Tag: PGS PRODUCTIONS

3.6.9 விமர்சனம்

3.6.9 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிலேயே சிறந்த புகழ்பெற்ற திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நடிப்பில் சிவ் மாதவ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் 3.6.9.அதிகாலை வேளையில் ஒரு திருச்சபையில் காலை நேர பூஜைக்காக பாதிரியாரும் அவரின் உதவியாளர்களும் தயாராகிக் கொண்டு இருக்க, மக்களும் கூட்டம் கூட்டமாக வரத் துவங்க, பூஜை துவங்கிய சில நிமிடங்களில் ஒட்டு மொத்த திருச்சபையையும் கைகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் ஒரு கூட்டம் முற்றுகையிட்டு அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.  அந்த கூட்டத்தின் தேவை என்ன…? அது அவர்களுக்கு கிடைத்ததா இல்லையா..?  அந்தக் கூட்டத்திடம் இருந்து பொதுமக்கள் தப்பித்தார்களா..? இல்லையா..? என்பதே இப்படத்தின் ஒற்றை வரிக் கதை.இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது வெறும் 81 நிமிடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட திரைப்படம், தணிக்கைக் குழுவும் படப்பிடிப்...