மருந்துகளுக்கு அப்பால்
இந்தியர்களுக்கு நவீன மருத்துவத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், பாரம்பரிய மருத்துவ முறைகளின் மீது ஈடுபாடு குறையவில்லை. பெரும்பாலான அலோபதி டாக்டர்கள் மாற்று மருத்துவத்தை நிராகரிப்பதோடு, அதற்கு எதிரான அபிப்ராயத்தையே வைத்துள்ளார்கள். நியூரோ-சைக்காட்ரிஸ்ட்டான மருத்துவர் E.S.கிருஷ்ணமூர்த்திக்கும் மாற்று மருத்துவத்தின் மீது அத்தகைய மனப்பான்மையே இருந்து வந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் மாற்று மருத்துவத்தின் பின்னுள்ள அறிவியலை அறிய விரும்பி ஆய்வினை மேற்கொள்கிறார்.
முடிவாக, ட்ரைமெட் (TriMed) எனும் சிறிய க்ளினிக் ஒன்றைத் தொடங்குகிறார். அலோபதியுடன் ஆயுர்வேதம், யோகா, அக்குபிரஷர், இயற்கை மருத்துவம் (Naturopathy), பிலாட்டிஸ் (Pilates) ஆகியவற்றை இனைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மாற்று மருத்துவத்தை உருவாக்குகிறார்.
பல்வேறு மாற்று மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்ததுதான் அவர் எடுத்து வைத்த முதல் படி. “இத்தகைய ஒ...