Shadow

Tag: Project C – Chapter 2 thirai vimarsanam

Project C – Chapter 2 விமர்சனம்

Project C – Chapter 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு தமிழ்ப்படமே! அதுவும் 88 நிமிடங்கள் மட்டுமே ஓடி, பார்வையாளர்கள் நேரத்தை மிகவும் மதிக்கிறது. மூன்று பாகங்கள் கொண்ட படத்தின், இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு, இந்தியாவின் முதல் சோஃபமோர் (Sophomore) திரைப்படம் என உரிமை கோரியுள்ளனர். பி.எஸ்சி, கெமிஸ்ட்ரி படித்த ராம்க்கு, சரியான வேலை கிடைக்காததால், படுக்கையில் அசைய முடியாமல் இருக்கும் ஒரு மருத்துவரைக் கண்காணிக்கும் வேலையில் சேருகிறான். மருத்துவரின் கண்டுபிடிப்பான ஒரு மருந்திற்கான தேவையைத் (demand) தெரிந்து கொள்ளும், அதன் மூலம் அதீதமாகச் சம்பாதிக்கத் தொடங்குகிறான். அவனிடமுள்ள பணத்தை அபகரிக்க நினைக்கிறாள் சமையல் வேலை செய்யும் பஞ்சவர்ணம். அந்த மருந்திற்கான ஃபார்முலாவைத் தேடியவாறு உள்ளார் பிசியோதெரபிஸ்ட்டாக அவ்வீட்டிற்கு வரும் மருத்துவரின் உதவியாள். பணமும் ஃபார்முலாவும் யாருக்குக் கிடைத்தது என்பதே படத்தின் கதை. வேலையில்லாமல் அல்லலுறு...