Tag: PVR Pictures

அகோரி திரைப்படம் – தீய சக்திக்கும், அகோரிக்கும் இடையேயான சண்டை
தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து. இவர் நடித்த ‘திருமணம்’, ‘ராஜா ராணி’ போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'அகோரி' ஆகும். இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார்.
'பாரதி' படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் 'அகோரி' என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் ஃபிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார். சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் ப...

ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’
1972 ஆம் ஆண்டு ஜான் மோரெல் என்பவர் எழுதிய நாவலான ஃபர்ஸ்ட் பிளட் (First Blood)-ஐத் தழுவி 1982 ஆம் ஆண்டு, அதே பெயரில் ஃபர்ஸ்ட் பிளட் படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்கு கொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் ஜான் ரேம்போ என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு.
வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் மூன்று படங்கள் வெளியாகின. அவை முறையே, ரேம்போ: ஃபர்ஸ்ட் பிளட் 2 (1985), ரேம்போ 3 (1988), ரேம்போ (2008)Rambo (2008 ) ஆகும். இவ்வனைத்துப் படங்களுமே வசூலில் சாதனை புரிந்தன என்கிற போதிலும் இரண்டாவது தொடர் படம் மட்டுமே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துப் பெரிய சாதனையை உருவாக்கியது. இதுவரை வெளிவந்த 4 தொடர் படங்களின் மொத்த வசூல் 727 மில்லியன் அமெரிக்க...



