
குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி
மூவி பஃப் நடத்திய ஃபர்ஸ்ட் கிளாப் எனும் குறும்படப் போட்டியின் முடிவுகள் கோலாகலமாக சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் எழில், இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, இயக்குநர் S.U.அருண் குமார், 2டி எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன், திரை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, படத்தொகுப்பாளர் K.L.பிரவீன், ஒலிப்பதிவாளர் உதயகுமார், இயக்குநர் ஹரி விஸ்வநாத், சென்னை சர்வதேச குறும்பட விழா இயக்குநர் ஸ்ரீனிவாச சந்தானம், காமன் மேன் மீடியா சந்தோஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இவர்கள், இறுதிச் சுற்றுக்குக் குறும்படங்களைத் தேர்ந்தெடுந்தெடுத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“பார்வையாளர்களைத் திரையரங்கை நோக்கி ஈர்க்க வல்ல புது திறமை...