அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்
நாயகி கதாபாத்திரத்தின் பெயர் அமுதா என்பதை எந்தச் சிரமமுமின்றி யூகிக்கலாம். வியாசர்பாடியைச் சேர்ந்த நாயகன், நாயகியின் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை எழுதுகிறான். அதன் முதல் வரி தான் படத்தின் தலைப்பு.
நாயகன் ரிஜன் சுரேஷ் நாயகி ஆர்ஷிதாவைக் காதலிக்கிறான். நாயகிக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. ஆனால், நாயகியைச் சுற்றுவதையே முழு நேர வேலையாகச் செய்கிறான். நாயகி கோபமாகத் தன்னை விட்டுவிடுமாறு கேட்கிறாள். நாயகன் ரொம்ப ஃபீலாவதால், டாஸ்மாக்கில் இருந்து அவனது நண்பர்களை அவனை அழைத்துக் கொண்டு துரைப்பாக்கம் மேம்பாலத்துக்கு வந்துவிடுகிறார்கள் ஒரு பாட்டுடன்.
வியாசர்பாடி
அண்ணன் கேடி
வந்தா லேடி
தந்தா தாடி
…
என நாயகனின் சோகத்தைப் பாட்டாகப் படிக்கிறார்கள். நாயகி பொறுத்துக் கொள்ள முடியாமல் காவல் நிலையத்தில் புகார் தருகிறாள்.
“அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க இல்ல? ஏன்டா பின்னாடியே போய் டார்ச்சர் செய்ற?”...